புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (21:35 IST)

சுஜித்தை மீட்க அரசு எனது யோசனையை கருத்தில் கொண்டிருக்கலாம் -கரூர் பிளம்ப்பர் ஆதங்கம் !

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுஜித்தை மீட்க  அரசு எனது யோசனையை கருத்தில் கொண்டிருக்கலாம் என   கரூர் பிளம்பரின்   பேட்டியளித்துள்ளார்.

கரூர் அடுத்த அருகம்பாளையம் தங்கநகர் பகுதியை சார்ந்தவர் பிரகாஷ், (வயது 62)., இவர் இப்பகுதியில் எலெக்ட்ரிஷியன் மற்றும் பிளம்பராக சுமார் 40 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் நிலையில், மூன்று தினங்களாக திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் 2 வயது குழந்தை சுஜுத் ஐ மீட்கும் காட்சிகளை கண்ட அவர், அவ்வபோது தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களை அவரது யோசனைகளை கூறி வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அந்த குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இரண்டு இரும்பு பைப்கள் ½ இன்ச் பைப்களை பக்கவாட்டில் கேமிரா உதவியுடன் கொண்டு சென்று, அதன் வழியாக எலெட்க்ரிக்கல் ஒயரிங்கிற்கு பயன்படும் ஸ்பிரிங்குகளை அனுப்பி அது குழந்தையின் கீழே ½ இன்ச் இரும்பு பைப் மூலமாக சென்றவுடன், பின்னர் பின்னிப்பிணைந்து இரண்டு கொக்கிகள் மூலமாக பிணைப்பு ஏற்படுத்தியவுடன், கேமிரா மூலம் அந்த சிறுவனை கண்காணித்து பின்னர் நைலான் கயிறுகளை கொண்டு மீட்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்த யோசனையையும், அனுபவம் வாய்ந்த இந்த பிளம்பரின் யோசனையையும் அரசு கேட்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் சுஜித் நம்மை விட்டு ஆழ்ந்த் உறக்கத்துச் சென்றுவிட்டார் என்பதால் பிளம்பரும் சோகம் அடைந்தார்.