மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை முன்கூட்டி நடத்தக்கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை!
மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடங்களை முன்கூட்டியே நடத்தக்கூடாது என சிபிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த கல்வி ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் ஆண்டு என்பதால் கோடை விடுமுறை விடப்படாமல் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்னதாக நடத்தக்கூடாது என சிபிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சிபிஎஸ்சி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை இப்போதே நடத்த துவங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva