தொடர்புடைய செய்திகள்
- மிரட்டும் கொரோனா: 1000-த்தை கடந்த ராயபுரம்: விரைவில் கோடம்பாக்கமும்...!!
- தமிழகத்தில் முதல்முறையாக 10ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
- 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
- 10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? நாளை சென்னை ஐகோர்ட்டில் விசாரணை
- சல்மான் கான் தொடங்கிய யூடியுப் சேனல்…. குறைந்த நாளில் 10 லட்சம் பாலோயர்கள்
மாலை வெளியாகும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை!
சிபிஎஸ்இ, 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட சூழலில் ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது ஜூலை மாதம் நடத்தப்படும் என கூறப்பட்ட சிபிஎஸ்இ, 10, +2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடப்பட உள்ளது. ஆம், சிபிஎஸ்இ, 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
