திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (14:00 IST)

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனிமனித இடைவெளி, சிறப்பு பேருந்து வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது சரியா என்ற கேள்வியைக் கட்சிகள் எழுப்பின. இதுகுறித்த பொது நல வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கை எப்படி அனுமதிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து மனுதாரர் தான் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற அனுமதி கோரினார். இதனையடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்
 
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி தேர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது