செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஜூன் 2020 (14:51 IST)

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.சி தேர்வுகள் ரத்து! மத்திய அரசு அறிவிப்பு!

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் சி.பி,.எஸ்.சி தேர்வுகளை ரத்து செய்வதற்கான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் சில மாநிலங்கள் மாணவர்களுக்கு முழுவதுமாக தேர்வுகளை ரத்து செய்து முந்தை மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க உத்தரவிட்டன. இந்நிலையில் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் தேர்வுகள் நடக்காமல் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய தேர்வாக சி.பி.எஸ்.சி தேர்வுகள் உள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலே தேர்வு நடத்த முடியும் என்ற சாத்தியம் இருந்தது.

இதுகுறித்து மத்திய அரசு பிற மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொண்டது. அதன் விளைவாக நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், முந்தைய மூன்று தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.