திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (11:34 IST)

இறுதியாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா? – அமைச்சர் விளக்கம்!

தமிழகம் முழுவதும் பல்கலைகழகங்களில் பருவத்தேர்வுகள் ரத்து செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் மார்ச் மாதம் முதலாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பருவத்தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இந்நிலையில் யூஜிசி அறிவுறுத்தலின்படி 11 பேர் கொண்ட ஆய்வு குழு அமைக்கப்பட்டு தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களை தவிர அனைவருக்கும் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவது குறித்த விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்வது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மத்திய அரசின் பதிலை பொறுத்து தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.