சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் ரத்து -பிரதமர் மோடி
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளொன்று 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநிலங்களில் கொரொனாவைத் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் பள்ளிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: கொரொனா சூழலில் மாணவர்களின் நலன் அடிப்படையில் சிபிஎஸ் இ பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.