மலைப்பாதை பள்ளத்தாக்கில் கார் விபத்து: 8 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ல கிஷ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் பலரும் உயிரிழந்ததோடு, சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் காரில் இருந்த சிறுமி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவதுடன் சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.