திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:00 IST)

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் சென்ற பேருந்து விபத்து! – 6 பேர் பலி!

Bus Accident
ஜம்மு காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியி ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் துணை ராணுவத்தினர் பலர் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பேருந்து அருகே இருந்த ஆற்றில் கவிழ்ந்தது. அந்த பேருந்தில் 2 ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரும், 37 இந்தோ திபேத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் பயணித்த நிலையில் விபத்தில் 6 வீரர்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த விபத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.