வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (11:12 IST)

ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என பதிவு செய்த எம்.எல்.ஏ!

kerala mla
ஜம்மு-காஷ்மீரை 'இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்' என பதிவு செய்த எம்.எல்.ஏ!
ஜம்மு காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என சர்ச்சைக்குரிய வகையில் கேரள எம்எல்ஏ ஒருவர் சமூக வலைத்தளத்தில் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட கேடி ஜலீல் என்ற எம்எல்ஏ சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சென்று வந்தார் 
 
தனது ஜம்மு காஷ்மீர் பயணம் குறித்து தனது பேஸ்புக்கில் எழுதிய எம்எல்ஏ ஜலீல், ஜம்மு காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீரின் பகுதியை ஆசாத் காஷ்மீர் என்று அழைக்கப்படும் நிலையில் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீரை அவர் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் என பதிவிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்
 
இதனையடுத்து மக்கள் கடும் கோபத்தில் அவர் மீது விமர்சனங்களை வைத்த நிலையில் அவர் தற்போது அந்த பதிவை திருத்தி உள்ளதாக கூறப்படுகிறது