1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (15:57 IST)

தேர்தலில் கைகொடுக்குமா பட்ஜெட் -நடுத்தர மக்களுக்கு அதிக சலுகைகள் !

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நடுத்தர மக்களைக் கவரும் அம்சங்கள் அதிகமாக உள்ளன. எனவே இந்த பட்ஜெட்டால் தேர்தலில் பாஜக ஏற்படும் என அஞ்சப்பட்ட பின்னடைவு இல்லாமல் போகும் எனக் கூறப்படுகிறது.
 


2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. இதனை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வர இருப்பதால் இந்த பட்ஜெட் தாக்கல் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


எதிர்பார்த்தது போலவே இந்த பட்ஜெட்டும் தேர்தலைக் குறிவைத்து நடுத்தர மக்களை அதிகளவில் கவரும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள், வீடு வாங்குவோர், அமைப்பு சாரா தொழிலாளர்ல்கள் ஆகியோருக்கு அதிகளவில் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாத வருமான வரி விலக்கு உச்சவரம்பு இப்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் இந்த பட்ஜெட் தேர்தலில் பாஜக வுக்கு ஏற்பட இருந்த பின்னடைவில் இருந்து காப்பாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சில முக்கிய சலுகைகளின் விவரம் :-

1) தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2) வருங்கால வைப்பு நிதி மற்றும் சில குறிப்பிட்ட பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் 6.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.
3) நிரந்தர கழிவுத் தொகை ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
4) 2.4 லட்சம் ரூபாய் வரையில் வீட்டு வாடகைக்கு வருமான வரி நீக்கப்பட்டுள்ளது
5) வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு தற்போது வழங்கப்படும் வருமான வரி விலக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
6) வருமான வரி செலுத்துவோருக்கு 24 மணிநேரத்தில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டு ரிட்டன் தொகை திருப்பிச் செலுத்தப்படும்
7) அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தொகை 3 தவணைகளாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
8) அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வுதியம் ரூ. 3,000 வழங்கப்படும்
9) கிராஜூட்டி தொகை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தப்படும்.
11) வீடு வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.