வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (12:40 IST)

#Budget2019: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு!

இன்று இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் தாக்கலில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேறியதா என பார்ப்போம்...
 
தற்போது தனிநபர்களின் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் ஆக உள்ளது. 2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய் உள்ளவர்கள் 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ளோர் 30% வரியும் செலுத்தி வருகின்றனர்.
 
வருமான வரி விலக்கு உச்ச வரம்பை கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
ஆனால், இந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றத்தை அளிக்காமல் லாபத்தை கொடுத்துள்ளது. அதாவது, தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ,.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.