எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது தெரியுமா? #Budget2019 சுவாரஸ்யங்கள்
இன்று இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், முக்கியமாக கவனிக்கப்பட்ட இரண்டு வருமான வரி உச்சவரம்பு மாற்றமும், கருப்பு பண மீட்பும்தான்.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பை கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்படாமல் இருந்தது. எனவே இந்த பட்ஜெட்டில் தனிநபர்களுக்கான வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதேபோல், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ,.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, பினாமி சட்டம், பணமதிப்பிழப்பால் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது எனவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது எனவும் செய்தி வெளியிட்டுள்ளார் பொருப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல்.