வியாழன், 22 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (14:58 IST)

மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

plane
மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
 
இந்த விமானம் மும்பையில் தரையிறங்குவதற்கு 40 கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்தபோது, விமான கழிப்பறை ஒண்றில், வெடிகுண்டு மிரட்டல் செய்டிஹ்யை கண்டறிந்த விமானிகள் இதுகுறித்து விமான போக்குவரத்து  கட்டுப்பாட்டிற்கு தெரிவித்தனர்.
 
இதையடுத்து, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை விமானதை  சோதனையிட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
 
இதையடுத்து மும்பையில் இருந்து சென்னை வரும் விமானங்களை கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.