திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (10:02 IST)

மெட்ரோ பணியால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்..!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.
 
சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமனி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்ல வேண்டும்.
 
ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை  வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லலாம்.
 
அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையின் இடதுபுறம் திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.  
 
வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் வழியாக செல்லலாம்.
 
Edited by Siva