மாவோயிஸ்டுகளை விட பாஜகவினர் ஆபத்தானவர்கள்" - மம்தா பானர்ஜி
மாவோயிஸ்டுகளை விட பாஜகவினர் ஆபத்தானவர் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கும் மம்தா பானர்ஜி இடையே பனிப்போர் நடந்து வருகிறது என்பதும் அவ்வப்போது இந்த போர் வெடித்து வார்த்தைகளால் போர் உண்டாகும் என்பதும் தெரிந்ததே
குறிப்பாக மம்தா பானர்ஜி கட்சியின் எம்எல்ஏக்களை தற்போது பாஜக இழுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது என்றும் அதனால் மம்தா பாலாஜியின் அரசு கவிழும் ஆபத்து உள்ளதாகவும் இதனால் பாஜக மீது மம்தா பானர்ஜி கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மாவோயிஸ்டுகளை பாஜகவினர் ஆபத்தானவர்கள் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது என்றும் கூறியுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு பாஜக பிரமுகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது