செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2021 (17:33 IST)

பிரபல நடிகை வீட்டில் உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி !

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தென்னிந்திய சினிமாவிலும் பாலிவுட்டிலும் பிஸியான நடிகராக நடித்து வருகிறார்.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்களில் நடித்து வரும் ஹீரோ அவர் தான்.

விஜய் சேதுபதி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மற்றந் நடிகர்களின் வீட்டிற்குத் திடீர் விசிட் அடிப்பார். இந்நிலையில் நேற்று மதியம் நடிகை மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு வீட்டிற்குச் சென்றார் அவர்.


இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், நேற்று என் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்திருந்தார் விஜய் சேதுபதி. எங்கள் வீட்டு எளிமையான உணவு . இருப்பினும் சாதாரணமான நாளை நல்லதொரு நாளான ஆக்கியதற்கு நன்றி விஜய் என்று தெரிவித்துள்ளார்.