பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்: டெல்லியில் அமித்ஷாவுடன் ஈபிஎஸ் பேச்சு!

பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்
siva| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2021 (09:00 IST)
பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து அதிமுக பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்தன
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணியில் இணையும் பாஜகவுக்கு 30 சீட்கள் மட்டுமே தர முடியும் என முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் இதனால் பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது

மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்ற வகையில் பாஜக எதிர்பார்ப்பதாகவும் ஆனால் 30 சீட் என்பது எதிர்பார்ப்பு விட மிகவும் குறைவாக இருப்பதாகவும் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இருப்பினும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கூடுதலாக தொகுதிகளை பெற வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சந்தித்ததை அடுத்து அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :