டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!
மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுவேந்திர அதிகாரி செய்தியாளர்களை சந்தித்தபோது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை தோல்வி அடையச் செய்தது போல, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே டெல்லியில் நல்லாட்சியை வழங்க முடியும் என்று மக்கள் எண்ணியுள்ளனர். அதனால் தான் பாஜகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று குறிப்பிட்டு, மாநில மக்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து துன்பத்தில் இருப்பதாகவும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து மாநிலத்தில் நல்லாட்சியை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில், பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? சுவேந்து அதிகாரி கூறியது போல் அங்கும் ஆட்சி மாற்றம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Edited by Siva