டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?
டெல்லியில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் அதிஷி ராஜினாமா செய்து விட்டதாகவும், மாற்று அரசு பதவி ஏற்கும் வரை முதல்வர் பொறுப்பை கவனித்துக் கொள்ளுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, முதல்வர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் சக்சேனா அவர்களை சந்தித்து கொடுத்துள்ளார். கவர்னர் அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாகவும், மாற்று அரசு அமையும் வரை முதல்வர் பொறுப்பில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், டெல்லியின் புதிய முதல்வர் இன்னும் ஓரிரு நாளில் தேர்வு செய்யப்படுவார் என்றும், விரைவில் பாஜக தலைமையிலான அரசு டெல்லியில் பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edited by Siva