வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (16:30 IST)

பாஜகவில் இருந்து விலகிய முக்கியத் தலைவர்! அதிர்ச்சி முடிவு!

மகாராஷ்டிரா பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் கட்சே  கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

பாஜக தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. கடந்த 2016ஆம்ஆண்டு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் அவருக்கு கட்சி சீட் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த ஏக்நாத் இப்போது பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸில் இணைய உள்ளார். இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பட்டீல் உறுதி செய்துள்ளார்.