1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (08:30 IST)

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முதல் தகவலில் காங்கிரஸ் முன்னிலை

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ண தொடங்கப்பட்டன 
 
இந்த நிலையில் வாக்குகள் எண்ணிக்கை குறித்த முதல் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. புதுவையில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் தபால் வாக்குகள் ஏதும் பதிவு செய்யப்படுவதால் நேரடியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன 
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் என்பவர் முன்னணியில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் பின்னணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் அதிமுகவின் நாராயணன், காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் உட்பட 23 பேர் போட்டியிடுகின்றனர். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் முத்தமிழ் செல்வன், திமுகவின் புகழேந்தி, நாம் தமிழர் கட்சியின் கந்தசாமி உட்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.