வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (06:46 IST)

முதலமைச்சரின் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வரும் மே 12ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தலாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நடைபெறுகிறது. 
 
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு இரண்டு வாக்காளர் அட்டைகளும், இரண்டு இடங்களில் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதாகவும், பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஹரிஷ் குரான திஸ் ஹசாரி குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மீது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்  உத்தரபிரதேச மாநிலத்தின் காஜியாபாத் தொகுதியிலும், டெல்லி சாந்தினி சவுக் தொகுதியிலும் உள்ள இரண்டு முகவரிகளில் இரு வாக்காளர்கள் அட்டைகளை கெஜ்ரிவால் மனைவி சுனிதா வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக வேட்பாளரும் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர் கரோல் பாக் மற்றும் ராஜேந்திர நகர் ஆகிய இரு தொகுதிகளில் வாக்களிக்கும் வகையில் 2 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக, டெல்லி முதல்வரின் மனைவி மீதே வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது