வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஜூலை 2018 (10:18 IST)

மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடும் டெல்லி முதல்வர்

டெல்லியில் துணை நிலை ஆளுனருக்கும், முதல்வருக்குமான அதிகார பிரச்சனையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் துணை நிலை ஆளுனர் தொடர்ந்து அரசு நடவடிக்கைகளை முடக்கும் விதமாக நடந்து கொள்வதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் மாநிலத்தில் யாருக்கு பவர் அதிகம் என்று தீர்ப்பளிக்க அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
 
இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என தீர்ப்பளித்தது.
 
இந்நிலையில் கெஜ்ரிவால், சில முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய சொல்லி தலைமை செயலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். செயலாளர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது என்று அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
 
இதனால் மீண்டும் கடுப்பான கெஜ்ரிவால், இது சம்மந்தமாக விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அவரின் மனு மீதான விசாரணை வரும் வாரத்தில் வர உள்ளது.