அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு புதிய பதவி
அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவலியைச் சேர்ந்த பெண் நீராக தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
அவரது தலைமையிலான அமைச்சரவையில் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாரகவும் உள்ள நிலையில், தற்போது, , உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ''நம் நாட்டின் பொருளாதார இயக்கம், இன சமத்துவம், சுகாதாரம், குடியேற்றம், கல்வி ஆகிய உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து செயல்பட்டுத்துவார்'' என்று அறிவிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்