வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 மே 2023 (12:30 IST)

திடீரென கர்நாடக தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்த அமைச்சர் அமித்ஷா: என்ன காரணம்?

Amitshah
கர்நாடக மாநிலத்தில் வரும் பத்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி கிளம்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் விறுவிறுப்பான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் கலவரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த அமித்ஷா உடனடியாக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்றுள்ளார். 
 
அவர் மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை செய்து வருவதாகவும் காணொளி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
 பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சி காரணமாக தற்போது மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran