வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (18:15 IST)

புதருக்குள் தள்ளி... ஜஸ்டு மிஸ்ஸில் எஸ்கேப்பான பாஜக வேட்பாளர்!

பாஜகவை சேர்ந்தவர்கள் மக்களிடமும் சக கட்சியினரிடமும் அடி உதை வாங்குவதை போல மேற்குவங்கத்தில் பாஜக் வேட்பாளர் அடி வாங்கியுள்ளார். 
 
மேற்குவங்கத்தில் கரீம்பூர், காரக்பூர் உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கரீம்பூர் தொகுதி பாஜக வேட்பாளர்  ஜாய் பிரகாஷ் மஜூம்தார். இவர் நாடியா மாவட்டத்தில் காரில் சென்ற போது திரிணமூல் காங்கிரஸார் இவரது காரை வழிமறித்துள்ளனர். 
 
இதனால் காரை விட்டு அவர் கியே இறங்கியதும், யாரும் எதிர்பாராத வகையில் திரிணமூல் காங்கிரஸார்  பாஹக வேட்பாளரை புதருக்குள் இழுத்து காலால் எட்டி உதைத்தனர். 
 
இதைக் கண்டு, விரைந்த பாதுகாப்புப் படையினர் திரிணமூல் காங்கிரஸாரை விரட்டியடித்து பாஜக வேட்பாளரை மீட்டு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம், அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.