வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (09:06 IST)

”10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்” சிவசேனா சவால்

மஹாராஷ்டிராவில் பாஜவின் ஆட்சியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ள நிலையில் “நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என சிவசேனா எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக கவர்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ”அஜித் பவார் கொடுத்த போலி ஆவணங்கள் அடிப்படையில் கவர்னர், பாஜக ஆட்சியை அனுமதித்துவிட்டார்” என குற்றம் சாட்டினார்.

மேலும் “பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் 165 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்” எனவும் கூறியுள்ளார்.