என்னது பிரியங்கா காந்தியா? காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைமை யார்?

Last Updated: வெள்ளி, 21 ஜூன் 2019 (08:51 IST)
என்னை தொடர்ந்து கட்சி தலைமையை யார் ஏற்பார் என்பதை நான் முடிவி செய்ய மாட்டேன் கட்சிதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. 
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் படு மோசமான வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்து நிற்கிறது. 
 
இந்த தோல்வியால் மனமுடைந்த ராகுல் கட்சியின் தலைவர் பொருப்பை ராஜினாமா செய்தார். ஆனால், இதை கட்சியினர் ஏற்கவில்லை. இருப்பினும் அவர் தனது ராஜினாமா முடிவில் இன்று வரை உறுதியாகவே உள்ளார் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ராகுல் காந்தியிடம் தங்களுக்கு அடுத்து கட்சிக்கு தலைமை ஏற்பது யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் அதை முடிவு செய்வது நான் அல்ல கட்சிதான் இது குறித்து முடிவெடுக்கும் என பதிலளித்தார்.
கட்சிதான் முடிவெடுக்கும் என்றால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பார்களா என சிந்தித்தால் அதற்கு வாய்ப்பு கம்மி ஏனென்றால் இப்போது காங்கிரஸ் கட்சி இளைஞர்களையே முன்நிறுத்த விரும்புகிறது.
 
அப்படியானால் அட பிரியங்கா காந்தியா? எனவும் சிந்திக்க தோன்றுகிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி மக்களை வெகுவாகவே கவர்ந்தார். அவருக்கு தலைமை பொருப்பு கொடுத்தால் குடும்ப நபர் ஒருவரே கட்சிக்கு தலைமை ஏற்றது போலவும் ஆகிவிடும். 
 
பிரியங்காவுக்கு அரசியல் பெரிதாய் தெரியாது எனும் பட்சத்தில் அவருக்கு உறுதுணையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இருப்பார்கள். கூட்டி கழித்து பார்த்தால் இதுவும் சாத்தியம்தான் போல... இருப்பினும் ராகுல் கூறியது போல கட்சி இது குறித்து எடுக்கும் முடிவுக்காக காத்திருப்போம்... 


இதில் மேலும் படிக்கவும் :