வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (09:15 IST)

பாஜக எம்.பி.களுக்குப் பயிற்சி வகுப்புகள் – மோடி, அமித்ஷா பங்கேற்பு !

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் பாஜக எம்.பி.க்களுக்குப் பயிற்சி அளிக்க சிறப்பு வகுப்புகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக பாஜகவின் நாடாளுமன்றக் குழு அலுவலகம் பாஜகவின் அனைத்து எம்.பி.க்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளது.  ‘அப்யாஸ் வர்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இதில் அனைத்து எம்.பி.களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வகுப்புகளில் பாஜக எம்.பி.கள் மட்டுமல்லாது மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பல்வேறு தலைப்புகளின் கீழ் விரிவுரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.