எல்லை மீறும் தல - தளபதி ரசிகர்கள்: டிரெண்டாகும் கேவலமான ஹேஷ்டேக்!!
தல - தளபதி ரசிகர்கள் மாற்றி மாற்றி கேலி செய்துக்கொள்வதில் சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் சினிமாவின் இரு முக்கியமான முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்குமார். இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் ரசிகர்கள் அவ்வப்போது போட்டியுடன் பேசிக்கொள்வதும் உண்டு.
ஆனால், உண்மையில் விஜய் மற்றும் அஜித்துக்கு இடையே போட்டி கிடையாது. இருவரும் தங்களை நண்பர்களாக மட்டுமே பார்க்கின்றனர். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் போட்டித்தன்மை அதிகமாக உள்ளது.
இந்த போட்டி இன்று டிவிட்டரில் எல்லை மீறியுள்ளதாகவே தெரிகிறது. ஆம், அஜித் ரசிகர்கள் #RIPactorVIJAY என்றும், விஜய் ரசிகர்கள் #ஆகஸ்ட்8_பாடைகட்டு என்றும் ஹேஷ்டேக்கை உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் சமூகத்திற்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் மனதாரா பாராட்டாமல் இன்னும் இப்படி எல்லை மீறும் கேலி கிண்டல்களை மேற்கொள்வது அதிருப்தியான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பில் பிங்க படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.