1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (07:30 IST)

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கம் அணிக்கு 3வது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கோவை அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த அணி திருச்சி, காரைக்குடி ஆகிய இரண்டு அணிகளை வென்றுள்ள நிலையில் நேற்று கோவை அணியையும் வெற்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 116 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி 13.3 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
கோபிநாத் மிக அபாரமாக விளையாடி 41 பந்துகளில் 82 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சேப்பாக்கம் அணியின் ஹரிஷ்குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளதால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
நேற்றைய போட்டிக்கு பின்னர் சேப்பாக்கம் அணி மற்றும் திண்டுக்கல் அணி தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளது. காஞ்சி மற்றும் கோவை அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது