1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP against Rahul Gandhi

ராகுலுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

பாஜக
ரஃபேல் விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துதாக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலரும் குற்றம் சாட்டிவந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு குறித்தான விசாரணையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் சந்தேகத்திற்கு இடமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, விசாரணைக்கு கோரிய சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ரஃபேல் விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டு கூறியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பியும் போராடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
அஞ்சு கிலோ வெள்ளியை அபேஸ் செய்த கும்பல்: காரைக்குடியில் கைவரிசை!