வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (18:58 IST)

பாஜகவின் 10ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. முக்கிய பிரபலங்களுக்கு சீட் இல்லையா? முற்றிலும் புதுமுகங்கள்..!

பாஜகவின் 9 கட்ட வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளிவந்துவிட்ட நிலையில் தற்போது 10ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் இதில் பல பிரபலங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மேற்கு வங்கம், சண்டிகர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 பேரில் 8 பேர் புதிய வேட்பாளர்கள் ஆவர்.
 
சண்டிகர் தொகுதியில் பாஜக சார்பில்  சஞ்சய் தண்டன் என்பவர் போட்டியிடுகிறார். அதேபோல் மேற்கு வங்காளத்தின் அசன்சால் தொகுதியில் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுகிறார்.
 
உத்தர பிரதேச மாநில்லத்தில் உள்ள காஜிபூர் தொகுதியில் பரஸ்நாத் ராய், மெய்ன்புரி தொகுதியில் ஜெய்வீர் சிங், கவுஷம்பி தொகுதியில் வினோத் சோன்கர், பாலியா தொகுதியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன் நீரஜ் சேகர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran