1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (15:27 IST)

திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும்..! வறுமையை ஒழிக்காதது ஏன்.? பிரதமர் மோடி..!!

PM Modi
திமுகவை வீட்டுக்கு அனுப்ப  பாஜகவால் மட்டுமே முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகனை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கும் தெளிவாக தெரிகிறது என்று தெரிவித்தார்.
 
ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 
 
மேலும் வறுமையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை பாஜக செய்து தந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆட்சியில் இருந்தவர்கள் வறுமையை ஒழிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி,  திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று கூறினார்.
 
பொய் சொல்லி ஆட்சியில் இருப்பது தான் திமுக, காங்கிரஸ் போன்ற குடும்ப கட்சிகளின் ஒரே நோக்கம் என்றும் திமுக காங்கிரஸ் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் வறுமை ஒழிக்க முடியவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். தங்கள் வாரிசுகள்  அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதையே திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நினைக்கின்றன என்று விமர்சித்தார். 


பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான் என்றும் பட்டியலின, பழங்குடியின மக்கள் அதிகாரத்துக்கு வருவதை திமுக காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.