செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (19:18 IST)

அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம்-சொமோட்டோ

chicken briyani
2023 சொமோட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது

இந்த உலகில் எத்தனை வகையான சாப்பாடு இருந்தாலும், பிரியாணி என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் இந்தியாவில் உள்ள முக்கிய விஷயங்களின்போது, திருமணத்தின்போது இந்தப் பிரியாணி சமைப்பது என்பது கெளரவமாகவும் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகள் முதல் இளைஞர், முதியோர் என அனைத்து தரப்பினரும் பிரியாணியை ரசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

தற்போது யூடியூப் பார்ப்பதிலும், கடைகளிலும் கூட ரசிகர்களின் அதிக ஆர்வத்துடன்  ருசிக்கிற உணவாக பிரியாணி முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், 2023 சொமோட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் பிடித்துள்ளது. ஓராண்டில் மட்டும் 10.9 கோடி பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளதாகவும், இந்தாண்டு ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணிகளை மொத்தமாக சேர்த்தால் 8 குதுப்மினார்களை நிரப்பலாம் என செமோட்டோ தெரிவித்துள்ளது.
 
zomato

மேலும், சொமோட்டோவில் 2023 ஆம் ஆண்டு ஆன்லைனில் அதிகபட்சமாக 380 முறை உணவு ஆர்டர் செய்தவர் மும்பையைச் சேர்ந்த ஹனீஸ் என்பவர் என்று தெரிவித்துள்ளது.
இவர் சராசரியாக 9 முறை உணவு ஆர்டர் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.