வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (17:49 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை ரத்து: என்ன காரணம்?

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வரும் நிலையில் இந்த மாதம் பௌர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
திருப்பதியில் தற்போது ஆதித்தியாயன உற்சவம் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த கருட சேவை ரத்து செய்யப்பட்டது. 
 
மேலும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் போற அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் திருப்பதி ரயில்நிலம் அருகே உள்ள மண்டபத்தை இடித்துவிட்டு புதிதாக 600 கோடி ரூபாயில் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது ஆகியவை குறித்தும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran