ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (19:09 IST)

சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் ....இத்தனை கோடியா?

இந்த ஆண்டு சபரிமலை வருமானம் 18 கோடி ரூபாய்  குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளம் மாநிலம் சபரிமலையில்   மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு அய்யப்பன் கோயில் கடந்த16 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

அய்யப்பன் கோயில் மண்டல பூஜை நாளை இரவு 11 மணிக்கு மூடப்படும் எனவும், மகர விளக்கு விழாவையொட்டி, டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இந்த ஆண்டு சபரிமலை வருமானம் 18 கோடி ரூபாய்  குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மண்டல சீசன் துவங்கி 39 நாட்களுக்கு பிறகு மொத்த வருவாயாக ரூ.204.30 கிடைத்துள்ளது எனவும், நேற்று வரை 31, 43, 136 பக்தர்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் எனவும், காணிக்கையாக ரூ.3.89 கோடியும், அரவணை பிரசாதம் விற்பனை மூலம் ரூ.9.32 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.12கோடியும்,வருமானம் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ரூ.222.98 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார்.