வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 ஜனவரி 2023 (09:23 IST)

புத்தாண்டில் குவிந்தது ஆர்டர்.. உணவு டெலிவரி செய்ய புறப்பட்ட ஜொமைட்டோ சி.இ.ஓ!

புத்தாண்டில் குவிந்தது ஆர்டர்.. உணவு டெலிவரி செய்ய புறப்பட்ட ஜொமைட்டோ சி.இ.ஓ!
ஆன்லைன் உளவு டெலிவரி நிறுவனமான ஜொமைட்டோவில் புத்தாண்டு தினத்தில் உணவு ஆர்டர்கள் குவிந்ததை அடுத்து டெலிவரி பாய்கள் அனைவரும் விறுவிறுப்பாக டெலிவரி செய்து வந்தனர். 
 
இந்த நிலையில் ஜொமைட்டோ  நிறுவனத்தின் சிஇஓ ஆர்டர்கள் அடுத்தடுத்து வந்ததை அடுத்து தானே களத்தில் இறங்கி உணவுடெலிவரி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு உணவு விநியோக சேவையை அதிகரித்த நிலையில் ஜொமைட்டோ சி.இ.ஓ தீபக் என்பவர் தனது அலுவலக பணியை ஒதுக்கிவைத்துவிட்டு உணவு டெலிவரி செய்ய கிளம்பிவிட்டார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது 
 
மேலும் அவரே உணவு டெலிவரி செய்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அவர் உணவு டெலிவரி செய்வது இது முதல் முறை அல்ல கடந்த தீபாவளி அன்று கூட இதே போல் பிஸியாக இருந்த நேரத்தில் களத்தில் இறங்கி உணவு டெலிவரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva