1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Birld flu announced as disaster in Kerala

அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்: பேரிடராக அறிவித்தது கேரள அரசு!

Bird Flu
பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்ததுள்ளது கேரள அரசு.

 
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்து கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இதன் அபாயத்தை குறைக்க கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்ததுள்ளது கேரள அரசு. கோட்டயம், ஆலப்புழா ஆகிய கேரள மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமானதால் கேரள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - மேலாண் இயக்குநர்