பறவைக் காய்ச்சல் பீதி: கோழி, வாத்துக்கள் அழிப்பு!!
பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு கோழி மற்றும் வாத்து கொண்டு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் இதன் அபாயத்தை குறைக்க கேரளாவில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது.