தொடர்புடைய செய்திகள்
- தடகள போட்டியில் பங்கேற்று பரிசு பெற்ற கல்லூரி மாணவிகள்
- 14 மாணவிகளின் தலையை மொட்டையடித்த ஆசிரியர்: மன்னிப்பு கோரிய பள்ளி நிர்வாகம்..!
- 6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்கள்: பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
- நீட் தேர்வு போலவே எஸ்.ஐ தேர்விலும் கெடுபிடி.. மாணவிகள் தலையில் இருந்த பூக்களை அகற்றிய அதிகாரிகள்..!
- தமிழக அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்கள்: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.
கல்வி அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்: அதிர்ச்சி சம்பவம்..!
பீகார் மாநிலத்தில் தங்கள் பள்ளிக்கு சரியான வசதி செய்து தராத கல்வி அதிகாரிகளின் காரை மாணவிகள் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் மஹ்னார் பகுதியில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் போதிய வசதிகள் இல்லை என்று மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் கல்வி அதிகாரிகள் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அரசு பள்ளியை பார்வையிட கல்வித்துறை அதிகாரிகள் காரில் வந்த நிலையில் ஆக்கிரமடைந்த மாணவிகள் அந்த காரை அடித்து நொறுக்கினர். பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஆத்திரத்தில் மாணவிகள் கல்வி அதிகாரிகளின் காரை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Mahendran
