வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (16:14 IST)

தமிழக அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்கள்: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.

college students
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கு உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  விண்ணப்பம் பெறப்பட்டது என்பது அதன் பின் கல்லூரி தொடங்கி தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வரும் 21ஆம் தேதி நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
இது குறித்த கூடுதல் விவரங்களை மாணவர்கள் http://tngasa.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை கல்லூரிகளில் சேராத மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் சென்று எந்தெந்த கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கிறது என்பதை அறிந்து அவற்றில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Mahendran