திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (17:14 IST)

ரயிலில் உள்ளாடைகளோடு சுற்றிய எம் எல் ஏ…. காரணம் இதுதானாம்!

ரயிலில் உள்ளாடைகளோடு சுற்றிய எம் எல் ஏ…. காரணம் இதுதானாம்!
பீஹாரை சேர்ந்த கோபால் மண்டல் என்ற எம் எல் ஏ ரயிலில் வெறும் உள்ளாடைகளோடு இருந்ததாக புகார் எழுந்தது.

பீகார் மாநிலத்தின் ஆளும்கட்சி எம் எல் ஏவான கோபால் மண்டல் என்பவர் கடந்த  வாரம் ரயிலில் பயணம் செய்த போது ஆடைகளைக் களைந்துவிட்டு வெறும் உள்ளாடைகளோடு இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தவே அதற்கு இப்போது அவர் விளக்கமளித்துள்ளார்.

அதில் ‘ரயிலில் எனக்கு வயிற்று உபாதை ஏற்பட்டதால் நான் ஆடைகளைக் களைந்துவிட்டு கழிவறைக்கு சென்றது உண்மைதான். ஆனால் அப்போது என்னைத் தடுத்த நபரிடம் நான் விலகிச் சென்றேன். அந்த கம்பார்ட்மெண்ட்டில் பெண்கள் யாரும் இல்லை. எனக்கு 60 வயது ஆகிறது.’ எனக் கூறியுள்ளார்.
ரயிலில் உள்ளாடைகளோடு சுற்றிய எம் எல் ஏ…. காரணம் இதுதானாம்!