ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:47 IST)

நீயா நானா… இந்த வாரம் வடிவேலு ஸ்பெஷல்!

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான நீயா நானா இந்த வாரம் வடிவேலு போன்ற தோற்றம் கொண்டவர்களை வைத்து நடக்க உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் வடிவேலு போன்ற தோற்றம் கொண்ட நகலிசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வடிவேலு கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மீண்டும் ஆரவாரமாக சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி அவரின் ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.