திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (16:10 IST)

யுவன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்… ஹிட் இயக்குனரோடு மூன்றாவது முறையாகக் கூட்டணி!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா மற்றும் அதர்வா நடிக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையைக்க உள்ளாராம்.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார்.

இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்தில் அதர்வா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா ஒரு கௌரவ வேடத்தில்தான் நடிக்க உள்ளாராம். அதுவும் பாலா மற்றும் அதர்வா ஆகியவர்களுக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்பதால் எடுத்த முடிவுதானாம்.
இந்நிலையில் படத்துக்கு இசை சிறப்பாக வரவேண்டும் என்பதால் யுவன் ஷங்கர் ராஜாவோடு மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைக்க உள்ளாராம் பாலா. ஏற்கனவே இவர்கள் நந்தா மற்றும் அவன் இவன் ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.