1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bihar minister died after corona

கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் மரணம் – அதிர்ச்சி செய்தி!

கொரோனா
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் இன்று மூளையில் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிஹாரின் ப்ரான்பூர் தொகுதி பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ வினோத் குமார் . இவர் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிகிச்சையில் குணமான அவர் நலமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட, அவர் விமானம் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.