லத்தியால் இளைஞர்களை தாக்கிய நர்ஸ்கள்...
மருத்துவமனையைப் புகைப்படம் எடுத்த 2 இளைஞர்களை செவிலியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் மிகவும் பின் தங்கிய பகுதிகளாக இது அறியப்படும் நிலையில் இங்குள்ள சுகாதாரம், மருத்துவவசதிகள் உள்ளிட்டவை பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், பீகார் மா நிலத்தில் உள்ள சப்ரா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததை அங்குள்ள இரு இளைஞர்கள் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது.
இதைப் பார்த்த அங்கு பணியாற்றும் செவிலியர்கள், அவர்கள் இருவரையும் பிடித்து, அவர்களை லத்தியால் தாக்குதல் வீடியோ வைரலாகி வருகிறது.
Edited by Sinoj