ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (11:58 IST)

கேரளாவில் மீண்டும் கொரோனா: ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு பாதித்ததாக தகவல்

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெருகி வரும் நிலையில் சீனாவையும் தாண்டி தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி விட்டது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி இத்தாலி உள்பட ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் தற்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டது
 
இந்தியாவில் நேற்றுவரை 34 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி தமிழகத்திலும் தற்போது இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அம்மாநிலத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த 5 பேரையும் பத்தினம்திட்டா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கேரள அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது