1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (19:51 IST)

பின் இருக்கைக்கும் சீட் பெல்ட் கட்டாயம்! வெளியான தகவல்

seat belt
விரைவில் அனைத்து கார்களின் பின் இருக்கையில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், கார்களில் செல்லும்போது, கார் ஓட்டுநர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர் கட்டாயம் சீல் பெல்ட் அணிய  வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டும்.
 
இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து  கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதன் மூலம் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம்  ஒலிக்கும். இவ்விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.